Saturday, 19 April 2014

கல்லூரி



கல்லூரி.....
மூன்றாண்டு வாழ்க்கை
மூச்சு நின்றாலும் மறக்காது,
நண்பனின் கோபம்..
எதிரியின் அக்கறை...
ஆசிரியரின் அதட்டல்...
அங்கே இருக்கும் 
ஒவ்வொரு மரமும் கல்லும் கதைசொல்லும்... 
நான் கல்லூரியின்
வகுப்பில் இருந்ததை விட
வெளியில் இருந்தது தான், அதிகமென்று....
எத்தனை அனுபவம்.. 
எத்தனை அதிர்ச்சி..
எத்தனை ஆச்சரியம்...
அத்தனையும் தந்தவர்களை விட்டு..
இன்று நான் மட்டும் தனியே...
இது முடிவல்ல.... 
மற்றும் ஒரு தொடக்கம்................

அன்புடன் செந்தில்...

Saturday, 17 August 2013

வைரமுத்து




வடுகபட்டியின் வைரமே.....!!
முத்தாய் நீ தோன்றியிருக்காவிட்டால்..
முத்தமிழும் ஏங்கியிருக்கும்
உன் பேனா முனைக்காக...!

Thursday, 8 August 2013

செல்லாக்காசு








பணம் என்றால் பிணமும்
வாயைத் திறக்கும் என்று சொன்னார்கள்....

இன்று அப்பிணத்தின்  நெற்றியில்
வைப்பதற்க்கு கூட
 என்னை எடுப்பதில்லையே ..!!!!

                                                         ----- 25  பைசா ( செல்லாக்காசு )
 

குடும்பம்



என் அப்பா சொன்னார் ....
எனக்கு பாட்டி கதை கூறினாள்  என்று ...

நான் சொன்னேன்......
எனக்கு பாட்டி இருந்தாள்  என்று .....

என் மகன் கேட்டான்.........   
பாட்டி  என்றால் என்னவென்று.. .. .. ..